Feb 22, 2011

சேர்த்து எழுதுதல் & சேர்த்து எழுதக் கூடாத எழுத்துக்கள்

சேர்த்து எழுதுதல்

தமிழ் மொழியில் ஒரு வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தையும் தனித்தனியாகத் தான் எழுதுவோம். மனிதன் என்றும் தமிழில் எழுதும் போது அதில் உள்ள நான்கு எழுத்துக்களும் ஒன்றுடன் ஓன்று ஒட்டாமல் தனித்தனியாக உள்ளன. ஆனால் அரபு மொழியில் எந்த ஒரு சொல்லை எழுதினாலும் இணைத்துத்தான் தான் எழுத வேண்டும்.
முஹம்மத் என்பதை அரபியில் எழுத வேண்டுமானால்  مُحَمَّدْ  என்றுதான் எழுத வேண்டும். இதில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் ஒன்றுடன் ஓன்று பின்னிப் பிணைந்து ஒரு எழுத்து போல் காட்சியளிப்பதைக் காண்கிறோம்.

சேர்த்து எழுதக் கூடாத எழுத்துக்கள்

அரபு மொழியில் எந்த ஒரு சொல்லும் ஒன்றிணைந்து ஒரு வார்த்தை போலவே இரண்டறக் கலந்து விடும். என்றாலும் கீழ்க்காணும் ஆறு எழுத்துக்கள் இதிலிருந்து விதிவிலக்குப் பெறும்.



ஒரு வார்த்தையில் மேற்கண்ட ஆறு எழுத்துக்களில் ஓன்று இருந்தால் அதற்குப் பின்னர் உள்ள எழுத்தைச் சேர்க்காமல் தனியாக எழுத வேண்டும்.,
  • இந்த எழுத்துக்களுக்கு முன்னாள் வேறு எழுத்தைச் சேர்க்கலாம் 
  • .இந்த எழுத்துக்களுக்குப் பின்னால் வேறு எழுத்தைச் சேர்க்கக்கூடாது
உதாரணமாக மனிதன் என்பதை  அரபியில்
              
  نْ دَ نِ مَ என்று தனித்தனியாக எழுதக் கூடாது
مَنِدَ نْ   என்று தான் எழுத வேண்டும்.

இந்தச் சொல்லில் முதல் மூன்று எழுத்துக்களும் ஓன்று சேர்ந்துள்ளன. ஆனால் கடைசி எழுத்து மட்டும் தனியாக நிற்கிறது.
மூன்றாவது எழுத்தாக  د  என்ற எழுத்து உள்ளது
சேர்த்து எழுதக் கூடாத   இந்த எழுத்துக்குப் பின் உள்ள  ن  தனியாக எழுதப்பட்டதக்கு இதுவே காரணம்.

மனிதன் என்பதை نْ تَ نِ مَ    என்று எழுதினால் நான்கு எழுத்தையும் ஒன்றாக இணைத்து  مَنِتَنْ  என்று எழுத வேண்டும்.
சேர்த்து எழுதக் கூடாத மேற்கண்ட ஆறு எழுத்துக்களில் ஓன்று இதில் இல்லாததே இதற்க்குக் காரணம்.

அறிவு என்று எழுத வேண்டுமானால்  اَ رِ وُ என்று தனித் தனியாக தான் எழுத வேண்டும்.
ஏனெனில்    ا க்குப் பின்னால் வேறு எழுத்தைச் சேர்க்ககூடாது.
அதுபோல் د  க்குப் பின்னாலும் வேறு எழுத்தைச் சேர்க்ககூடாது..

கீழ்காணும் வார்த்தைகள் ஏன் சேர்த்து எழுதப்படவில்லை என்பதை கவனிக்க.




மேற்கண்ட சொற்களில் ஆறு எழுத்துக்களில் ஓன்று இடம் பெற்ற சொற்களுக்குப் பின்னால் பிரித்து எழுதப்பட்டிருப்பதைக் காண்க.