பாடம் 14 - நிறுத்தி வாசித்தல்
தொடர்ந்து வாசித்து வரும் போது ஒரு வார்த்தையில் மூச்சை நிறுத்தினால் அந்த வார்த்தையின் கடைசியில் எந்தக் குறியீடு இருந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் ஸுக்கூன் இட்டுத்தான் நிறுத்த வேண்டும்.
رُسُلَ رُسُلِ رُسُلُ என்று மூன்றையுமே நிறுத்தும் போது ருஸுல் என்று தான் வாசிக்க வேண்டும்.
நிறுத்தும் வார்த்தையின் கடைசியில் ا அலிஃப் இருந்தால் நெடிலாகத் தான் நிறுத்த வேண்டும்.
ماً என்பதை ம் என்றும் நிறுத்தக் கூடாது மன் என்றும் நிறுத்தக் கூடாது மா என்று தான் நிறுத்த வேண்டும்.