Feb 22, 2011

பாடம் 12 - ஒரு எழுத்தை வேறு எழுத்தாக வாசித்தல்
ر க்கு முன்  نْ   ன்  என்ற உச்சரிப்பு வந்தால்  ன்  என்று  வாசிக்காமல் ர் என்று வாசிக்க வேண்டும்
 مَنْ رَّبُّكَ   இதை மன ரப்புக என்று வாசிக்கக் கூடாது. மர்ரப்புக என்று வாசிக்க வேண்டும்,.
م  க்கு முன் نْ   ன் என்ற உச்சரிப்பு வந்தால் அதை ன் என்று வாசிக்காமல்  ம்  என்று வாசிக்க வேண்டும்.

مَنْ مَّرَّ  இதை மன் மர்ர   என்று வாசிக்கக் கூடாது.மம்மர்ர என்று வாசிக்க வேண்டும்.

ل  க்கு முன் نْ  ன் உச்சரிப்பு வந்தால் அதை ல் என்று தான் வாசிக்க வேண்டும்.

مِنْ لَّدُنْ  இதை மின் லதுன் என்று வாசிக்கக்கூடாதுமில்லதுன்என்று வாசிக்க வேண்டும்.

ன்  என்ற உச்சரிப்பு نْ   மூலம் வந்தாலும்  نً இரட்டைக் குறியீட்டின் மூலம் வந்தாலும் இரண்டும் சமமே.


                                                                                                                                                                                             
  ي க்கு முன் ன் உச்சரிப்பு வந்தால் அதை نْ  ன் என்பதற்கும் ய் என்பதற்கும் இடைப்பட்ட உச்சரிப்பாக முக்கால் உச்சரிக்க வேண்டும்.

و  க்கு முன்  نْ  ன் உச்சரிப்பு வந்தால் அதை ன்  என்பதற்கும் வ் என்பதற்கும் இடைப்பட்ட உச்சரிப்பாக முக்கால் உச்சரிக்க வேண்டும்.

د  க்கு ஸுகூன் இருந்து பின்னால்  ت   இருந்தால்  د  எழுத்தை  ت யாக மாற்றி உச்சரிக்க வேண்டும்.

 
ذ  க்கு ஸுகூன் இருந்து பின்னால் ظ இருந்தால்   ذ  எழுத்தை ظ   யாக வாசிக்க வேண்டும்.

ط  க்கு ஸுகூன் இருந்து பின்னால ت    இருந்தால் ط  எழுத்தை ت    யாக வாசிக்க வேண்டும்.

ب   க்கு ஸுகூன் இருந்து பின்னால்  م  இருந்தால் ب   எழுத்தை  م     ஆக வாசிக்க வேண்டும்.

 




نْ  என்ற உச்சரிக்குப் பின்  ب   எழுத்து வந்தால் نْ  உச்சரிப்பை م  ம்
உச்சரிப்பாக வாசிக்க வேண்டும்.
யன்பூஅன் என்பதை ம்பூஅன் என்று வாசிக்க வேண்டும்.