Dec 1, 2015

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 தமிழ், ஆங்கிலம் என பல்வேறு மொழிகளை மிகவும் சிரமம் எடுத்துக் கற்றுக் கொள்ளும் நாம் ஏன் இந்த மகத்துவம் மிக்க குர்ஆனை ஓத அவசியமாக இருக்கும் அரபியை கற்க முயற்சி எடுப்பதில்லை என மக்கள் சிந்திப்பது கிடையாது.
  • ஆரம்பம் முதலே கற்காதவர்கள்...
  • சிறு வயதில் கற்று பின்னர் மறந்தவர்கள்...
  • அரை குறையாய் ஓதிக்கொண்டு யாரிடம் கேட்பது என வெட்கப்படுவர்கள்...
  • ஓத தெரிந்தும் சரியான உச்சரிப்பை உபயோகிக்கத் தெரியாதவர்கள்...

என அனைவரும் எளிய நடையில் புரிந்து ஓதுவதற்கு ஏதுவாக இந்த இணையதளம் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன் இன்ஷா அல்லாஹ்...

ஆங்கிலத்தில் கற்றுக் கொள்ள பல இணையதளங்கள் இருந்தாலும் தமிழ் மொழியில் எளிய வகையில் கற்றுக் கொள்ள ஓர் இணையதளம் தேவை என்ற அவசியத்தை உணர்ந்து இந்த இணையதளம் தொடங்கப் பட்டுள்ளது

குறிப்பு:

பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அனுமதியுடன் "குர்ஆனை எளிதில் ஓதிட" என்ற அவர்களின் புத்தகத்தை  ஒரு சில மாற்றங்களுடன் இங்கு தரப்பட்டுள்ளது.

மேலும் இந்த இணையத்தில் நீங்கள் காணும் குறைகளை எனக்கு கீழ்க்கண்ட ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்த அன்போடு வேண்டுகிறேன்...
 
இஸ்மத்
islamiyapathivukal@gmail.com